• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரஜினியின் திருமண மண்டபத்தின் சொத்துவரி தொடர்பான வழக்கு… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

ரஜினியின் திருமண மண்டபத்தின் சொத்துவரி தொடர்பான வழக்கு… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

  • October 15, 2020 / 10:13 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினியின் திருமண மண்டபத்தின் சொத்துவரி தொடர்பான வழக்கு… உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது. படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது.

பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இதன் புதிய ஷெடியூல் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினி சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக ரஜினி தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவில் “கொரோனா லாக் டவுன் டைமில் இந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் இப்போது வரை எங்களது திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவே இல்லை. அப்படி இருக்கையில் இதற்கு ரூ.6.5 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆகையால், சொத்து வரி செலுத்த நிர்பந்திக்க கூடாது. மேலும், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும், அபராத வட்டி விதிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் என்பவர் “மாநகராட்சி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களிலேயே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்ததோடு, அபராதம் விதித்து, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய உள்ளேன்” என்று எச்சரித்துள்ளார். இதன் பிறகு ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கை திரும்ப பெறுவதற்கு அனுமதி கேட்க, நீதிபதியும் அனுமதி கொடுத்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #madras high court
  • #Rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

“ரஜினி அவர்களை சிறந்த நடிகர்ன்னு சொல்ல முடியுமா? அவருக்கு எதுக்கு விருது?”… இயக்குநர் அமீரின் சர்ச்சை பேச்சு!

ரஜினியின்  ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version