சமீபத்தில் அறிமுகமாகி சில படங்களில் மட்டுமே நடித்த மேகா ஆகாஷ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தமிழ் படங்களில் நடித்துவந்த இவர் தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஹனு ராகவாபுடி இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான “லைய்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மேகா ஆகாஷ். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்டை” படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அதே வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த “வந்தாராஜாவாதான்வருவேன்” மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
அறிமுகப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், சிம்பு என பெரிய முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த இவர், 2019 ஆம் வருடம் வெளிவந்த “சாட்டிலைட் சங்கர்” என்னும் பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் “ஒரு பக்க கதை” படத்தில் நடித்துள்ள இவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகிவரும் திரைப்படம் “ராதே”. சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தன் அனுபவம் பற்றி கூறியபோது மேகா ஆகாஷ் சல்மான்கானுடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இவர் “ராதே படத்தைப்பற்றி வார்த்தைகளால் சொல்ல முடியாது. கண்டிப்பாக இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நான் இந்த படத்தில் நடித்துள்ளேன். பிரபுதேவா என்னை அழைத்து இந்த ஸ்கிரிப்ட் சொன்னபொழுது கண்டிப்பாக இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரமாக இருக்கும் என்று உறுதியானது. அதனால் மிகுந்த உற்சாகத்துடன் இதில் நடித்துள்ளேன். மேலும் நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்தது எனக்கு சிறந்த அனுபவம். அவருடன் நடிப்பது எனக்கு கனவாக இருந்தது. படப்பிடிப்பில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட உன்னிப்பாக கவனித்து அதை ஞாபகம் வைத்திருப்பார். அதுதான் அவரது வெற்றிக்கு காரணம். ஒருநாள் படப்பிடிப்பின்போது அவரது பியிங் ஹுயுமன் பவுண்டேசன் பற்றி பேசினேன். அடுத்த நாளே அதை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த பவுண்டேஷன் டி-ஷர்ட் களை எனக்கு பரிசளித்தார்” என்று மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.
ராதே படத்தில் சல்மான்கான் ஹீரோவாகவும், இரண்டு ஹீரோயின்களும் உள்ளனர். ஒருவர் நடிகை திஷா பட்டாணி இன்னொருவர் மேகா ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.