இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
தற்போது இவர் தன்னுடைய திருமண செய்து குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக உறுதி செய்துள்ளார்.
தற்போது இவரின் பேச்சிலர் பார்ட்டி நடைபெற்று அதில் எடுத்த புகைப்படங்களை இவரின் தங்கை மற்றும் பிரபல நடிகையான நிஷா அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்!
https://www.instagram.com/p/CF_9DxZslSe/?igshid=1kvtzw4fvpepq
https://www.instagram.com/p/CF_9HmKsxTj/?igshid=u0zdg58s24lz
https://www.instagram.com/p/CF_9Ls0s5xt/?igshid=jm3abns4la13