மார்க்கெட் இல்லாத நடிகருக்கு ஜோடியா?… சம்பள விஷயத்தில் ட்விஸ்ட் வைத்த நடிகை!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. ஆரம்பத்தில் அந்த நடிகை சில படங்களில் நடித்திருந்தாலும், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஒரு படம் தான் மிகப் பெரிய ஹிட்டானது. அப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது.

அதன் பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான படமும், டிவி டு சினிமா வந்து டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம்பிடித்த நடிகரின் குடும்ப படமும் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில், இந்த நடிகை மலையாள மொழியில் வெற்றிபெற்ற சமையலறை படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒப்பந்தமானார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்துக்கு குறைந்த சம்பளமே முதலில் பேசப்பட்டதாம். இப்போது, இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க மார்க்கெட் இல்லாத ஒரு நடிகர் கமிட்டாகியிருக்கிறார். இதனால் ஏற்கனவே பேசியதை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் படத்தில் இருந்து விலகி விடுகிறேன் என்று அந்த நடிகை தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். பாதி படம் எடுத்து விட்டதால், வேறு வழியின்றி அந்த நடிகை கேட்ட சம்பளத்தை கொடுத்து விட்டாராம் தயாரிப்பாளர்.

Share.