இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
March 14, 2021 / 10:45 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அந்த படம் தான் ‘இயற்கை’. இதில் ஷாம், அருண் விஜய் , குட்டி ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் இயக்கியுள்ள புதிய படமான ‘லாபம்’-யில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் நடித்துள்ளார். கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்த படத்தின் எடிட்டிங் பணியில் பிஸியாக பணியாற்றி கொண்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றிருக்கிறார்.
பின், நீண்ட நேரம் ஆகியும் எஸ்.பி.ஜனநாதன் அலுவலகத்திற்கு வராததால், அவருடைய உதவி இயக்குநர் வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு எஸ்.பி.ஜனநாதன் சுய நினைவின்றி இருந்ததை அடுத்து அவரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன் பிறகு ICU-வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 14-ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Can’t believe he is no more.. Really saddened by the news.. One of the nicest person I have ever met in my life. Will miss you deeply sir .. love you always #RIPpic.twitter.com/QKmTK5fuPq
அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தை பார்த்துவிட்டு ஆனந்தமாக பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது #RIPSPJananathanpic.twitter.com/USwbS6FXrM
It is with the heaviest Heart that We say good bye to #SPJananathan sir – it was a pleasure working with you sir Thankyou for your wisdom and kind words you will always be in my thoughts ! My deepest condolences to his family 🙏 pic.twitter.com/Ox1Ag0EEYE