ரஜினிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

தொடர்ந்து வரி செலுத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சென்னையில் வருமான வரித்துறையினர் விருது வழங்கி கவுரவித்தனர். ஞாயிற்றுக்கிழமை, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இன்ஸ்டாகிராமில் இதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சென்னையில்வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது தந்தை சார்பில் விருதை ஏற்றுக்கொண்டார்.


“அதிக மற்றும் உடனடி வரி செலுத்துபவரின் பெருமைக்குரிய மகள் என்று அப்பாவை கவுரவித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் #வருமான வரித்துறைக்கு மிக்க நன்றி” என்று அவர் அந்த இடுகைக்கு தலைப்பிட்டு, தான் சம்மன் பத்திரத்தைப் பெறுவது போன்ற சில படங்களையும் பகிர்ந்து உள்ளார் . இந்த செய்தியை ஐஸ்வர்யா பகிர்ந்தவுடன், ரசிகர்கள் ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர் .

இதற்கிடையில், ரஜினிகாந்த் திரைப்பட இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் ‘ஜெயிலர்’ என்ற புதிய படத்திற்காக இணைந்துள்ளார். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Share.