ரித்திகா சிங் நடத்திய போட்டோஷூட் !

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் இருந்து சுற்று . இந்த படம் 2016-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . நடிகர் மாதவன் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தார் . படத்தின் நாயகியாக ரித்திகா சிங் அறிமுகமாகி இருந்தார் . அறிமுக படமாக இருந்தாலும் இவரது நடிப்பு அனைவரும் ஆச்சர்யப்படுத்தியது . இவர் போட்ட பாக்ஸிங் சண்டைகளுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் இந்த படம் வெற்றி பெற்றது .

இறுதி சுற்று படத்திற்கு பிறகு ரித்திகா சிங் நடித்த படம் ஆண்டவன் கட்டளை . இந்த படத்தில் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் ரித்திகா .இதன் பிறகு நடிகர் லாரன்ஸுடன் இனைந்து சிவலிங்கா படத்தில் நடித்தார் ரித்திகா. இந்த இரண்டு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இதனை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து ஓ மை கடவுளே படத்தில் நடித்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

ரித்திகா சிங் தற்போது பிச்சைக்காரன் 2, கொலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் ரித்திகா சிங் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது .

 

Share.