தமிழில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் பிரம்மாண்டமான படங்களை உருவாக்குவதில் பெயர் போனவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 ஆகும்.
இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு,இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2. 1996-ஆம் வருடம் வெளிவந்த இந்தியன் படத்தின் சீக்குவலாக இந்த படம் அமையும்.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் தனக்கு பிடித்த இயக்குனர்கள் பற்றி பேசியுள்ளார்.
இவர் இயக்குனர் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், அருவி படத்தின் இயக்குனரான அருண் பிரபு புருஷோத்தமன், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் ஆகியோரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
மேலும் இவர் சில்லுக்கருப்பட்டி இயக்குனரான ஹலிதா சமீம் ஐ குறிப்பிட்டு, இவர் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனர் என்றும், இவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் “மின்மினி” படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மின்மினி படத்தின் கதைக்காக சிறுவயது கதாபாத்திரங்களாக படம்பிடிக்கப்பட்ட குழந்தைகள் வளரும் வரை காத்திருந்து மீதி படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் ஹலிதா என்பது குறிப்பிடத்தக்கது.