ஷங்கரின் ‘RC15’யில் ஹீரோயினாக நடிக்கும் கியாரா அத்வானி… அவருக்கு சம்பளம் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம். இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம்.

இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்துக்கான பூஜை கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி போடப்பட்டது. மிக விரைவில் இதன் ஷூட்டிங்கை ஆரம்பிக்க இயக்குநர் ஷங்கர் ப்ளான் போட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க கியாரா அத்வானிக்கு ரூ.3.75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.