திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே தனக்கு இருந்த தனி திறமையால் கவனம் ஈர்த்தவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ (சீசன் 7) நிகழ்ச்சி மூலம் ஃபேமஸானார். அதன் பிறகு ‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பாடல் பாடி அசத்தி வந்த ஷிவாங்கிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை ஷிவாங்கி சரியாக பயன்படுத்திக் கொண்டதால், மீண்டும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 2-விலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஷிவாங்கிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அடுத்ததாக சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிகையாக அவதாரம் எடுக்க உள்ளார் ஷிவாங்கி. இப்போது சிவகார்த்திகேயனின் ‘டான்’, உதயநிதி ஸ்டாலினின் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் ஆகிய இரண்டு படங்களில் ஷிவாங்கி நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். ‘பாகுபலி’ தேவசேனா லுக்கில் ஷிவாங்கி இருக்கும் இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
Devasena
pic.twitter.com/hEDBz04msg
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) August 6, 2021