தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். அந்த படம் தான் ‘ரோஜாக் கூட்டம்’. இயக்குநர் சசி இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, உயிர், பூ, துரோகி, நண்பன், நம்பியார்’ என படங்கள் குவிந்தது. சமீபத்தில், ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வந்தது.
‘எக்கோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கி வருகிறார். இதில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக ‘தடம்’ புகழ் வித்யா பிரதீப் நடிக்கிறார். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Wishing brother @Act_Srikanth
and the whole team of #Echo a huge success
Here’s the first look @Director_Nawin@gopinath_dop@AshishVid@Vidya_actress@IamPoojaJhaveri@Haroon_FC#DrRajasekar@j_studios@lightson_media@KskSelvaPRO pic.twitter.com/ZGaf0BmcRw
— Arya (@arya_offl) December 9, 2020