• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி?… வருத்தத்தில் ரசிகர்கள்!

ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி?… வருத்தத்தில் ரசிகர்கள்!

  • October 29, 2021 / 10:35 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி?… வருத்தத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ஆம் தேதி இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் “மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரையுலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் திரு.கே.பாலச்சந்தர் சார் அவர்களுக்கும், என்னுடைய அண்ணன் திரு.சத்யநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னுடைய நண்பர் திரு.ராஜ் பகதூர் அவர்களுக்கும்,

என்னுடைய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று (அக்டோபர் 28-ஆம் தேதி) இரவு திடீரென ரஜினி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரது ரசிகர்கள் பதறி விட்டனர்.

அதன் பிறகு மீடியாவிடம் பேசிய ரஜினியின் மனைவி லதா, முழு உடல் பரிசோதனைக்காக தான் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் நலமாக இருக்கிறார் என்றும் கூறினார். தற்போது, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காமல் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும் ‘இன்பார்க்சன்’ என்ற நோயால் ரஜினி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Rajini
  • #actor rajinikanth
  • #rajini admitted in icu at kauvery hospital
  • #super star rajini
  • #super star rajini admitted in icu at kauvery hospital

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

போதைப்பழக்கத்திற்கு  எதிராக ரஜினி  போட்ட கையெழுத்து !

போதைப்பழக்கத்திற்கு எதிராக ரஜினி போட்ட கையெழுத்து !

யாரும் பார்த்திடாத   ரஜினியின் அரிய புகைப்படம்   வைரல் !

யாரும் பார்த்திடாத ரஜினியின் அரிய புகைப்படம் வைரல் !

ரஜினியின் கடைசி படம் !  சோகத்தில் ரசிகர்கள் !

ரஜினியின் கடைசி படம் ! சோகத்தில் ரசிகர்கள் !

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version