‘நான் உங்கள் ரசிகர்’ என கூறிய முன்னணி ஹீரோ… திக்குமுக்காடிப் போன டாப்சி!
August 3, 2020 / 01:15 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்சி பன்னு. 2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சிக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். ‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர்’ என படங்கள் குவிந்தது.
டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். தற்போது, டாப்சி நடிப்பில் தமிழில் ஒரு படமும், ஹிந்தியில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி டாப்சி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதில் ஒரு குறிப்பிட்ட பிரபலத்தின் ட்வீட், டாப்சியை திக்குமுக்காடச் செய்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் “ஒரு ரசிகராக உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறேன்” என்று ட்வீட் போட்டிருந்தார். அதற்கு டாப்சி “இந்த ட்வீட்டை பார்த்ததும் நான் ஊமையாகிவிட்டேன். எனக்கு எப்படி இதற்கு பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இதை நான் எனது பிறந்த நாள் பரிசாக எடுத்துக் கொள்கிறேன். நான் உங்களை எவ்வளவு மதிக்கிறேன், வணங்குகிறேன் என்று உங்களுக்கே தெரியும். ரொம்ப நன்றி” என்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.
Happy birthday to you @taapsee . From a fan . Have a super duper year ahead. Big hug
Ok this is one message I am totally dumbfounded with. Don’t know exactly how to respond but this becomes my previous birthday gift. You know how much I adore you so no need to reiterate.thank you ❤️
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.