கே.எஸ்.ரவிக்குமார் நெல்சன் படத்தில் இருப்பது உண்மையா ?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் , இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது .

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் திரைப்படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இதனால் நெல்சன் – ரஜினிகாந்த் படம் கைவிடப்படும் என்று தகவல் வெளியானது . ஆனால் அது உண்மை இல்லை என்ற தகவல் பிறகு நெல்சன் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார் .

அதன் பிறகு இயக்குனர் நெல்சன் அடிக்கடி ரஜினிகாந்தை சந்தித்து கதை பற்றின விவாதத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்து . இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முத்து , படையப்பா போன்று வெற்றி படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் தலைவர் 169 படத்தின் திரைக்கதையை இயக்குனர் நெல்சனுடன் இணைந்து எழுதுகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது . இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் தலைவர் 169 படத்தில் திரைக்கதை எழுதவில்லை என்றும் இது முற்றிலும் தவறான தகவல் என்றும் தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது .

கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ்ராஜ்குமார் தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

Share.