மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீட்டர் பால்- சோகத்தில் வனிதா!
August 26, 2020 / 08:07 PM IST
|Follow Us
சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள்.இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் சமையல் ரெசிபி பற்றிய வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது திடீரென வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியது. பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
இதைத்தொடர்ந்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வனிதா, சொல்ல நிறைய உள்ளது. என்னால் எதுவும் இப்போது கூற முடியவில்லை. கடவுள் மிகப் பெரியவர். அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள் காரணத்துடன்தான் சில விஷயங்கள் நடைபெறும். வாழ்க்கை கடினமானது அனைவரும் எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். என்னை நம்புங்கள் உங்களால் முடியும் என்றும் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த பலரும் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி என்று கூறுகிறார்களே உண்மையா. விரைவில் அவருக்கு குணமடைந்து விடும் கவலைப்படாதீர்கள் என்று ஆதரவு கூறிவருகிறார்கள்.