பீட்டர் பாலின் உடல்நிலை குறித்து வனிதாவின் அறிக்கை!
August 26, 2020 / 10:38 PM IST
|Follow Us
சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள்.இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் சமையல் ரெசிபி பற்றிய வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது திடீரென வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியது. பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
இந்நிலையில் தற்போது வனிதா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது திருமணம் குறித்து பீட்டர்பாலின் உடல்நிலை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ” திருமணம் என்பது சட்ட ரீதியான பேப்பர்கள் மாற்றிக்கொள்வது அல்ல ஒருவர் கஷ்டப்படும்போது மற்றவர் இருப்பதுதான். நான் இவரை திருமணம் செய்து கொண்டபோது பைபிளுக்கு நிகராக இன்பத்திலும் துன்பத்திலும் அவரோடு இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்தேன், அதைப் போன்று எங்களுக்கு எவ்வளவு பிரச்சினை வந்த போதும் நாங்கள் இருவரும் உறுதுணையாக இருந்து வருகிறோம். தற்போது கடவுள் எங்களுக்கு மீண்டும் ஒரு பிரச்சினையை கொடுத்துள்ளார், ஆனால் நாங்கள் அதை தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று வாழ்ந்து காண்பிப்போம். பீட்டர் பால் ஒரு நல்ல மனிதர் அவருடைய நல்ல எண்ணத்தை விரைவில் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள். எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மிகப்பெரிய நன்றி” என்று உணர்ச்சி வசமாக குறிப்பிட்டுள்ளார்.
Marriage is not only a legal document u posses to say u are married..marriage is a union of two hearts and a celebration of life together..marriage and divorce is just a piece of paper to many..the joy and pain two individuals go through is only theirs to dwell in..