ஆக்ஷனில் தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி… ‘கோடியில் ஒருவன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், அக்னிச் சிறகுகள், காக்கி, தமிழரசன், கொலை’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ஆத்மிகா நடித்திருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராமச்சந்திர ராஜு, பிரபாகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு நடிகர் விஜய் ஆண்டனியே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.