தன் “நிசப்தம்” திரைப்படத்தை பிரமோட் செய்வாரா அனுஷ்கா செட்டி?! –
September 23, 2020 / 07:58 PM IST
|Follow Us
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் multi-lingual திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் இந்தப் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் ஒருவேளை நிலைமை சரியில்லை என்றால் இந்தப்படத்தை OTTயில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் நடிகை அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்புராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
தமிழில் இந்த திரைப்படம் “நிசப்தம்” என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் மாதவன் மியூசியனாகவும், அனுஷ்கா ஆர்டிஸ்டாகவும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த படத்தின் பிரமோஷனில் அனுஷ்கா ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு தெளிவான பதில் தெரியாத நிலையில், அவர் ஒரு சில பிரமோஷனில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அதிக அளவில் கலந்து கொள்ள மாட்டார் எனவும் உள் வட்டாரம் தெரிவிக்கிறது.