• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் சேதுபதி செய்த வேலையால் கடுப்பான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர்!

விஜய் சேதுபதி செய்த வேலையால் கடுப்பான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர்!

  • June 8, 2021 / 07:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதி செய்த வேலையால் கடுப்பான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 13 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து கொண்டிருக்கிறார். இதில் மேகா ஆகாஷ், கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக் மிக முக்கிய ரோல்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து டீசர் ரிலீஸ் தொடர்பாக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “அன்பார்ந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு… மன்னிக்கவும்… இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த #யாதும்ஊரேயாவரும்கேளிர் #YaadhumOoreYaavarumKelir படம் பற்றிய அத்தனை அப்டேட்ஸையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.

இந்த முறை டீசர் வெளிவருவது சம்பந்தமான போஸ்டரையோ, வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும்.

நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே, இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் படத்தின் முழு வெர்ஷனையும் படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரகாமை வைத்து எடிட் செய்து வைத்திருந்தாராம். தற்போது, விஜய் சேதுபதி அப்படத்தின் எடிட்டரை வைத்து இன்னொரு வெர்ஷன் எடிட் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், கடுப்பான படத்தின் இயக்குநர் ‘FEFSI’ தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் புகார் கொடுத்திருக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay Sethupathi
  • #director
  • #yaadhum oore yaavarum kelir

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

3 நாட்களில் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ செய்த வசூல் இவ்ளோவா?

3 நாட்களில் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ செய்த வசூல் இவ்ளோவா?

விஜய் சேதுபதியின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

ஓ.டி.டி தளத்தில்  வெளியாகும் வெற்றிமாறன் படம் ?

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் வெற்றிமாறன் படம் ?

கார்த்திக்கு வில்லனாகும் முன்னணி நடிகர் !

கார்த்திக்கு வில்லனாகும் முன்னணி நடிகர் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version