விஜய் சேதுபதி செய்த வேலையால் கடுப்பான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 13 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து கொண்டிருக்கிறார். இதில் மேகா ஆகாஷ், கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக் மிக முக்கிய ரோல்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த மார்ச் 4-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இதனைத் தொடர்ந்து டீசர் ரிலீஸ் தொடர்பாக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “அன்பார்ந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு… மன்னிக்கவும்… இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த #யாதும்ஊரேயாவரும்கேளிர் #YaadhumOoreYaavarumKelir படம் பற்றிய அத்தனை அப்டேட்ஸையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.

இந்த முறை டீசர் வெளிவருவது சம்பந்தமான போஸ்டரையோ, வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும்.

நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே, இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் படத்தின் முழு வெர்ஷனையும் படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரகாமை வைத்து எடிட் செய்து வைத்திருந்தாராம். தற்போது, விஜய் சேதுபதி அப்படத்தின் எடிட்டரை வைத்து இன்னொரு வெர்ஷன் எடிட் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், கடுப்பான படத்தின் இயக்குநர் ‘FEFSI’ தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் புகார் கொடுத்திருக்கிறாராம்.

Share.