மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள யோகிபாபு திரைப்படம்!
September 4, 2020 / 05:33 PM IST
|Follow Us
ராக்லைன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு நடித்து சென்ற வருடம் வெளியான திரைப்படம் “தர்ம பிரபு”.
யோகிபாபுவுடன் மொட்டை ராஜேந்திரன், ராதாரவி, ஜனனி ஐயர், ரேகா, ரமேஷ் திலக் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது.
எமலோகத்தில் நடக்கும் அரசியல் குறித்த காட்சிகளை நகைச்சுவையாக இந்த படம் எடுத்துக்கூறி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. தற்போது இந்த படம் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் OTT வழியாகவும், சாட்டிலைட் வழியாகவும் மக்களை சென்றடைய போவதாக தகவல் வந்துள்ளது.
தமிழில் இந்த படத்தை தயாரித்த ரங்கநாதன் இந்த மூன்று மொழிமாற்ற படங்களையும் தயாரிக்கிறார். எமலோகத்தில் எமன் பதவி காலியாகிறது அதற்காக யோகிபாபுவும் கருணாகரனும் மோதிக் கொள்வார்கள் இதை மிகவும் நகைச்சுவையாக மக்களை கவரும் விதத்தில் இயக்குனர் இயக்கியிருந்தார். இதன் மூலம் தற்போது யோகிபாபு மூன்று மொழிகளில் தன் காமெடி மூலம் மக்களை ஈர்க்க தயாராக இருக்கிறார்.