சர்ச்சைக்குரிய காட்மேன் இணைய தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது நீதிமன்றம்.
Zee 5 நிறுவனம் தயாரிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வெளிவர இருந்த காட் மேன் வெப்சீரிஸ் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் இரு தரப்பினருக்கும் இடையில் சண்டை ஏற்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளதாகவும் , அதனால் இந்த கதை வெளி வரக்கூடாது என்றும் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த கதையின் தயாரிப்பாளர் இளங்கோவன் மீதும், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மீதும் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் ஜூன் 12ஆம் தேதி வெளியாக இருந்த இந்த வெப்சீரிஸின் முதல் எபிசோட் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தெரிவித்துள்ள Zee5 நிறுவனம் “நாங்கள் பொறுப்பான கதைகளை தரும் தயாரிப்பாளர்கள். மேலும் நாங்கள் ஒரு கதையை எடுப்பதற்கு முன் பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கவனித்தே செயல்படுவோம் ” என்று குறிப்பிட்டிருந்தது.
இவர்கள் மேல் பதியப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த காட்மேன் வெப்சிரீஸின் தயாரிப்பாளரும் இயக்குனரும் ” இந்தக் கதை எந்த ஒரு இனத்தையும் மதத்தையும் அல்லது ஒருவரது நம்பிக்கையோ எதிர்த்து எடுக்கப்பட்டதல்ல , இது ஒரு சில தனிநபர் இந்த சமுதாயத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்றது பற்றிய கதையாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர் .