தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நிதியுதவி… சொன்னதை செய்து காட்டிய ஜோதிகா!
August 8, 2020 / 09:24 PM IST
|Follow Us
கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தவர் நடிகை ஜோதிகா. அதன் பிறகு அவரின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது. பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார். சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா “கோவில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும். கோவில்களுக்கு நிதியுதவி செய்வது போல் பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நிதியுதவி செய்யுங்கள்” என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
நடிகை ஜோதிகா சொன்ன இந்த கருத்து மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது. தற்போது, ஜோதிகா எந்த மருத்துவமனையை பார்வையிட்ட பின், தன் கருத்துக்களை சொன்னாரோ, அதே தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.