தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். இவரின் மகள் ஐஸ்வர்யா, 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டத்து யானை’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்தார். இந்த படத்தை ஐஸ்வர்யாவின் அப்பா அர்ஜுனே தயாரித்து, இயக்கியிருந்தார். இப்படம் 2018-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளில் வெளியானது. சமீபத்தில், தனக்கு ‘கொரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது என நடிகை ஐஸ்வர்யாவே தெரிவித்திருந்தார்.
மேலும், தான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது, நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “கடவுளின் கிருபையால் ‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்டு வந்து விட்டேன். இப்போது குணமாகி விட்டது. எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.