‘பாகுபலி’ பட கதாசிரியருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!
April 7, 2021 / 10:54 AM IST
|Follow Us
‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்த படத்தை இந்த ஆண்டு (2021) அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம். தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் வெற்றிக்கு அவருடைய தந்தையும், பிரபல எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத்தும் மிக முக்கிய காரணம்.
ராஜமௌலியின் அனைத்து படங்களின் கதை – திரைக்கதையை அவருடன் இணைந்து விஜயேந்திர பிரசாத்தும் எழுதியிருக்கிறார். ‘தளபதி’ விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஸ்க்ரிப்ட் வொர்க்கிலும் விஜயேந்திர பிரசாத் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, விஜயேந்திர பிரசாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.