பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா நேற்று(7.06.2020) மாரடைப்பால் காலமானார். இவரின் இறுதி சடங்குகள் இன்று மதியம் 2 மணி அளவில் பெங்களூரில் உள்ள சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவா சார்ஜாவின் இல்லத்தில் நடைபெற்றது.
அவரது இறுதி சடங்கில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கலந்துகொண்டுள்ளார்.அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ” சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அவரது குடும்பத்தினரான அர்ஜுன் , சுந்தர் ராஜ் , மனைவி மேக்னா ராஜ் மற்றும் சகோதரர் துருவா சார்ஜா அவர்களுக்கு ஆருதல் கூறினேன். இந்த சூழ்நிலையை தாங்கும் சக்தியை தருமாறு இறைவனை பிராத்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார் .
மேலும் திரைப்படப் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை இறுதி சடங்கில் கலந்துகொண்டு தெரிவித்தனர்.
இளம் வயதிலேயே இறந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னாராஜ் கர்ப்பமாக உள்ளார் என்பதால், பல பிரபலங்களும் நண்பர்களும் அவருக்கு நேரிலும் இணையம் மூலமும் ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.
சிரஞ்சீவி சார்ஜாவின் உடலை அவரது இல்லத்திலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.