எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ‘RRR’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வந்தது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு (2022) திரையரங்குகளில் ரிலீஸாகுமாம்.

Share.