இந்தியன் 2 படப்பிடிப்பு எங்கே தெரியுமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது . இதனை கருத்தில் கொண்டு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருக்கிறது லைக்கா நிறுவனம் என்ற செய்தி வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை தயாரிக்க இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருந்தது .

செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது . நடிகை காஜல் அகர்வால் மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது . சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிக்கலாம் எனத் தெரிகிறது. அதனால், வேறு ஊர்களில் படப்பிடிப்பை வைத்தால் கமல்ஹாசன் வந்து போக சிக்கலாக இருக்கும் என சென்னையிலேயே அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Share.