பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த ஜுன் 7 அன்று காலமானார்.இது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நடிகை மேக்னா ராஜை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சார்ஜா இறந்தபோது மேக்னாராஜ் கர்ப்பமாக இருந்தார். தான் கர்ப்பமாக இருந்தபோது கணவர் இறந்து விட்ட தூக்கத்தில் மேக்னாராஜ் உடைந்துபோய் காணப்பட்டார். இவருக்கு பல சினிமா பிரபலங்களும் நண்பர்களும் ஆறுதல் கூறி வந்தனர்.
சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்குப்பின் மேக்னா ராஜ், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு”நீ எப்பொழுதும் என் சிரூ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்” நீ என்னை அவ்வளவு காதலித்திருக்கிறாய், அதனால்தான் உன்னால் என்னை தனியாக விட்டுவிட்டு செல்லமுடியவில்லை. எனக்கு நீ கொடுத்திருக்கும் பெரிய பரிசு நம் குழந்தை. மீண்டும் நம் குழந்தை வடிவில் உன்னை கையில் ஏந்த நான் காத்திருக்கிறேன்” என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.
சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு அவரது உறவினர்களையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.