கோலிவுட் சினிமா உலகில் தொடர்ந்து வித்யாசமான நல்ல படங்களையும் திறமை மிகு புதிய இயக்குனர்களையும் அறிமுகமாக்கும் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் . ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று , அருவி போன்ற படங்கள் இதற்கு உதாரணம் . இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்க படம் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தில் நடிகர் சிபிராஜ் நாயகனாக நடிக்க இருக்கிறார் .
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ,இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம் இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.