பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரின் இழப்பு அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள். மேலும் மன அழுத்தம் காரணமாக இவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு பாலிவுட்டில் நடந்த சில கசப்பான அனுபவங்களும் காரணம் என்று செய்தி வந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு அவர் இறந்ததற்கான காரணம் பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தற்போது இணையத்தில் வெளியாகி நம் மனதை உலுக்கி கொண்டிருக்கும் காட்சி சுஷாந்த் சிங் ராஜ்புத் வளர்த்த நாய் (வஃட்ஜ்)அவரை காணாமல் சோகமாக அவரைத் தேடி அலைகின்றது. மேலும் அவரது புகைப்படத்தை வைத்து சோகமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.
வீட்டிற்குள் யாரேனும் வருவதுபோல் தோன்றினால் அவராக இருக்குமோ என்று சென்று பார்த்து ஏமாந்து திரும்புகிறது.
இந்த காட்சி உள்ள வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு அவரது இறப்பு குறித்து சோகமாக பதிவிட்டு வருகிறார்கள், இவரது உறவினர்களும் நண்பர்களும்.
இவ்வளவு இளம் வயதில் இந்த திறமையான நடிகர் உயிரை மாய்த்துக் கொண்டது அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது செல்லப் பிராணிகளும் தற்போது தவித்து வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.