மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

‘திரௌபதி’ , ருத்ர தாண்டவம் , போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை மோகன் ஜி இயக்க போவதாக அறிவிப்பு வந்து இருந்தது . ஏற்கனவே செல்வராகவன் சாணி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
இதை தவிர செல்வராகவன் தான் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் .

இந்நிலையில் செல்வராகவன் – மோகன் ஜி கூட்டணியில் உருவாகும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து புது அப்டேட் வெளியாகி இருக்கிறது.

மேலும் சதுரங்க வேட்டை , கர்ணன் போன்ற படங்களில் நடித்த நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்த படத்தில் செல்வராகவனுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படத்தின் தலைப்பு பார்வை வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பாகாசூரன் என்று படத்திற்கு தலைப்பு வைத்து இருக்கிறார்கள் .

Share.