5 மொழிகளில் OTT-யில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
September 11, 2020 / 10:40 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாக உள்ளது. தற்போது, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படமும் OTT-யில் ரிலீஸாகப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ ப்ளெக்ஸ்’ கைப்பற்றியிருக்கிறது.
இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம். பிரத்யேகமாக பணம் செலுத்தி படம் பார்க்கும் OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ரிலீஸாகிறதாம். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.