சாணிக்காயிதம் படத்தின் கதை இது தான் !

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்கையாக நடித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ் . மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களை ஏமாற்றியது . இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியாகும் சாணி காயிதம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது .

சாணி காயிதம் படத்தை ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். நடிகர் செல்வராகவன் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தின் கதை 1980களில் நடுக்கம் கதையை எடுத்து இருக்கிறார்கள் .ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . மே 6ம் தேதி ஓடிடியில் இந்த படம் வெளியாகிறது.

சாணி காயிதம் படத்தை பற்றி தற்பொழுது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பேசியுள்ளார் அதில்
சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு. ஒருவரின் வாழ்க்கையை அழித்தவர்களை சிறையில் தள்ளுவதால் பழிவாங்கல், அழித்தவர்களை அழிப்பதே பழிவாங்கல் என்ற மனநிலை கொண்ட ஒரு பெண்ணின் கதை. அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும். ஒரு பெண் பழிவாங்கும் கதையை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்லியிருக்கிறேன் என்றார்.

ஏற்கனவே இவர் இயக்கிய ராக்கி திரைப்படம் இளைஞர்களை கவர்ந்து இருந்தது . இந்த நிலையில் சாணி காயிதம் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது .

Share.