தமிழக சட்டமன்ற தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 6-ஆம் தேதி) நடைபெறுவதால் பல திரையுலக பிரபலங்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். இன்று காலை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

குறிப்பாக விஜய் செய்த விஷயம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஆம், விஜய் அவரது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். உச்ச நட்சத்திரமான ஒருவர் இப்படி சைக்கிளில் வந்து வாக்களித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், அஜித்தை அவரது ரசிகர்கள் டென்ஷனாக்கி விட்டனர். அஜித் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். வாக்குச்சாவடியில் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க அருகில் வந்தனர், அப்போது கோபமான அஜித் ஒரு ரசிகரின் செல்போனை பிடுங்கி விட்டார். பின், சில நிமிடங்களுக்கு பிறகு அந்த ரசிகரிடம் செல்போனை கொடுத்து விட்டார் அஜித்.

ரஜினி, கமல், விஜய், அஜித்தை தொடர்ந்து நடிகர்கள் விஷ்ணு விஷால், அருண் விஜய், பிரசன்னா, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, விக்ரம், சித்தார்த், ஹரிஷ் கல்யாண், யோகி பாபு, நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, ரித்விகா, விஜயலக்ஷ்மி, நிரஞ்சனி, ப்ரியா பவானி ஷங்கர், சுகன்யா, குஷ்பூ, இயக்குநர்கள் சேரன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

1

2

3

Share.